NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுழற்பந்துவீச்சால் 71 வருட சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்திய பிரபாத் ஜயசூரிய

அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் (28) போல் ஸ்டைர்லிங்கின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய 7வது டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை பிரபாத் ஜயசூரிய எட்டியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அல்ப் வெலண்டைன் 1951/1952 பருவகாலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 50 விக்கெட் என்ற மைல்கல்லை அடைந்திருந்தார். இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில், பிரபாத் ஜயசூரிய 7வது டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதுமாத்திரமின்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் வெர்னன் பில்லெண்டர் மற்றும் டொம் ரிச்சட்சன் ஆகியோருடன் 2வது இடத்தையும் பிடித்துக்கொண்டார். வெர்னன் பில்லெண்டர் 2012ம் ஆண்டு 50 விக்கெட்டுகளையும், டொம் ரிச்சட்சன் 1896ம் ஆண்டு 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் எட்டியிருந்தனர்.

இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் சார்லி டேர்னர் தக்கவைத்துள்ளார். இவர் 1888ம் ஆண்டு 6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles