NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடானில் சிறிய ரக விமானம் முச்சக்கர வண்டி மீது மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

சூடான் நாட்டில் பூச்சி மருந்து தெளிக்கும் சிறிய ரக விமானம் தரையிறங்கியபோது, முச்சக்கர வண்டி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சூடானில் பயிர்களுக்குப் பூச்சி மருந்து தெளிப்பதற்குச் சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தப்படுகின்றது.

அந்தவகையில், சிறிய ரக விமானம் ஒன்று பூச்சி மருந்து தெளிக்கும் பணியின் போது, விவசாய நிலப்பகுதியில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்கியது.

ஓடுபாதையில் வேகமாகச் சென்ற விமானம் திடீரென எதிரே வந்த முச்சக்கர வண்டி மீது மோதியதில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தது.

இந்த விபத்தில் 4 விவசாயிகள் உயிரிழந்ததுடன், 8 பேர் பலத்த காயமடைந்தனர் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles