NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடானில் விமான விபத்து – 9 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சூடானில் விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சூடானின் கரையோர நகரமான போர்ட் சூடானில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் சூ10டான் இராணுவ அதிகாரிகள் 4 பேர் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த விபத்தில் ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles