NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடான் உள்நாட்டு போர் தீவிரம் – அமைதி பேச்சுவார்த்தை தோல்வி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இராணுவம் மற்றும் துணை இராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

இதில் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

சூடானில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. என்றாலுமே போர் தொடர்ந்தபடி இருந்தது. போரை நிறுத்தி விடு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

இதற்கிடையே இரு இராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது.

தலைநகர் மத்திய கார்டூமில் உள்ள ஒரு சந்தை அருகே விமான தாக்குதல் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இரு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைதி பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஏற்பாடு செய்தன.

Share:

Related Articles