வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இதில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசின் தலைநகர் பிராக்கிலிருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோஸ்ட் நகரில் யு கோஜோட்டா என்ற என்ற விஜடுதி இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அதிகாலை ஒரு மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த விடுதி மற்றும் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 30 பேரை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.