NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செல்வாநகர் கிராமத்தில் வைரஸ் தாக்கத்தினால் பன்றிகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவிவரும் வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக சகல பன்றிகளும் உயிரிழந்துவிட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய பண்ணையில் இருந்த 150 வரையான பெரிய பன்றிகளும், 100 க்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்த பண்ணை உரிமையாளர், நோய்த்தாக்கம் ஏற்பட்டு 2 நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுவதாக தெரிவித்தார்.

வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நாடாளவிய ரீதியில் உள்ள பல பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பன்றிகள் உயிரிழந்திருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles