இலங்கை செவிப்புலனற்றோர் சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேர் ஒரு கோடியே நானூற்று முப்பத்தி இரண்டாயிரத்து நூற்று பதினைந்து ரூபாவை தனியார் நிறுவனம் ஒன்று மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்தமுறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இலங்கை செவிபுலனற்றோர் சம்மேளனத்தைச் சேர்ந்த 48 பேர் ஒரு கோடியே நானூற்று முப்பத்தி இரண்டாயிரத்து நூற்று பதினைந்து ரூபாவை தனியார் நிறுவனம் ஒன்றில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இருப்பினும் இதற்கான வட்டித் தொகையையோ அல்லது வைப்பிலிடப்பட்ட பணத்தையோ குறித்த நிறுவனம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.