NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பம்!

கடந்த வருடம் நவம்பர் 26ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 7,657 ஏக்கர் நிலத்திற்கான 8,705 விவசாயிகளின் கணக்குகளில் 122 மில்லியன் ரூபா பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மேலும் பல பிரதேசங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோடு, அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 9,067 ஏக்கருக்கு 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் கணக்குகளில் பயிர் சேத நிதியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி, சேதமடைந்த 4,324 ஏக்கர் பயிர்களுக்கு 3,272 விவசாயிகளின் கணக்குகளில் 70 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles