NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் டிமெரிட் (Demerit) புள்ளி முறையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே திசையில் என்ற தொனிப்பொருளில் நேற்று (25) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களை தடுப்பதற்கும், சாரதிகள் செய்யும் தவறுகளை கண்டறிந்து அபராதம் செலுத்தும் முறைமையான டிமெரிட் புள்ளி முறை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான அவதானிப்புகளுக்காக 5000 நவீன தொழிநுட்ப பெட்டிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இந்த நடைமுறையின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளியாக 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles