ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
நாட்டின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.