NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (13) வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு அரசியல் கட்சியும் 16 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர்.

மேலும், வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் நாளை (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles