எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவினை திரட்டும் வகையில் இந்த பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளில் 51 வீதமானவற்றின் ஆதரவினை பெற்றுக்கொள்வதே தமது திட்டம் என அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளராக தம்மிக்க போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.