ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
