NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் தமிழ் MPக்கள்…!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

Share:

Related Articles