ஜப்பானில் 4ஆவது முறையாக மியாசாஹி என்ற இடத்தில் இன்று(08) சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி காலை சுமார் 10.25 மணியளவில் நிலநடுக்கம் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது. தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.