ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் முன்னேற்றங்களை கண்டிருந்தாலும், இன்று வரையில் அந்நாட்டின் அரச பணிகளுக்கு ஃப்ளொபி டிஸ்க்குகளே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
மக்களின் ஆவணங்களை ஃப்ளொப்பி டிஸ்க் ஊடாகவே வழங்க வேண்டும் என்பது அந்நாட்டில் பல வருடங்களாக இருந்துவந்த சட்டமாகும்.
இந்நிலையில் இந்த சட்டத்தை நீக்குவதற்குப் பல திருத்தங்கள் தேவைப்பட்டதன் காரணமாக, உடனடியாக மாற்ற முடியாத நிலைமை இருந்தது.
எனினும் அந்நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் டாரோ கான், 2021ம் ஆண்டு இந்த நடைமுறையை மாற்றும் வகையில், ‘ஃப்ளொபி டிஸ்க்களுக்கு எதிரான யுத்தம்’ என்ற விடயத்தை அறிவித்திருந்தார்.
அதன்படி இன்றையதினம் அந்நாட்டில் ஃப்ளொபி டிஸ்க் பாவனை முற்றாக நீக்கப்படுவதாக அமைச்சர் டாரோ கான் அறிவித்துள்ளார்.