ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால் அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் பாதிப்புக்குள்ளகியுள்ளன.
தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா மாகாணத்துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் இன்று(04) தெரிவித்துள்ளனர். இது தவிர, பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 51 போ் மாயமாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.