வானியல் அதிசயங்களில் ஒன்றான வால்நட்சத்திரம் 2024 ஜூன் மாதம் மேற்கு அடிவானத்தில் தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..’12 பி/பொன்ஸ்-புரூக்ஸ்'(12P/Pons-Brooks) எனும் வால்நட்சத்திரமானது இவ்வாண்டு ஜூன் மாதம் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர் ..
சுமார் 30 கிலோமீற்றர் நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும் மேலும் , தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வால்நட்சத்திரமானது 1385ஆம் ஆண்டு சீனாவிலும், 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகளுள்ளன. இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095ம் ஆண்டு தோன்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.