NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டி 20 உலக கோப்பையில் அமெரிக்கா முதல் வெற்றியை பதிவு செய்தது

இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

195 ரன் என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களம் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் கலீம்சானா பந்துவீச்சில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டான ஆண்ட்ரிஸ் கூஸ்-ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி அமெரிக்க அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது.

அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Share:

Related Articles