NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு நோய் அபாய எச்சரிக்கை – வைத்தியசாலைகளுக்கான விசேட வழிகாட்டுதல்கள் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குறிப்பிட்ட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் இன்றி வைத்தியசாலைகளை பேணுவதே இதன் முதன்மையான நோக்கமாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,200 ஆக பதிவாகியுள்ளது.

இவற்றில் சுமார் 50 சதவீதம் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 10,232 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 9,906 பேரும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles