NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெஸ்ட் போட்டியில் 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அபார வெற்றி!

பங்காளதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. 

கடந்த 14 ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பாடிய பங்காளதேஷ் அணி முதல் இன்னிங்சில் 382 ஓட்டங்கள் குவித்தது. ஷான்டோ 146 ஓட்டங்கள் விளாசினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் நிஜத் மசூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 146 ஓட்டத்தில் சுருண்டது. பங்காளதேஷ் அணியின் எபாடொத் ஹொசனை 4 விக்கெட் வீழ்த்தினார். 

236 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பங்காளதேஷ் நேற்றைய 3-வது நாள் பேபாட்டி 4 விக்கெட் இழப்பிற்கு 425 குவித்து டிக்ளேர் செய்தது. 

ஷான்டோ 2-வது இன்னிங்சிலும் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு வீரர் மொமினுல் ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்கள் சேர்த்தார்.

ஒட்டுமொத்தமாக பங்காளதேஷ் அணி 661 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றதால், ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும். கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்கை தொடங்கியது. 

நேற்று முன்தினம் 3-வது நாள் போட்டி முடிவில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் போட்டி தொடங்கியது. 

தொடர்ந்து துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 115 சுருண்டது. இதனால் 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அபார வெற்றி பெற்றது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles