(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அட்லாண்டிக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கப்பலின் 3D ஸ்கேன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கடல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக்கின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேனை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஸ்கேன் மூலமாக டைட்டானிக் கப்பலின், சிதைவுகளை விரிவாகவும், தெளிவாகவும் பார்க்க முடிகிறது.
இரு ரிமோட் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 6 வாரங்களாக வடக்கு அட்லாண்டிக் கடலில் இந்த ஆய்வை மேற்கொண்டு வந்தனர்.
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று, 1500 பயணிகளுடன் டைட்டானிக் கப்பலானது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்ட போது, வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.