NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம்…!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (05) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதன்படி, இலங்கை மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.17 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.39 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.75 ரூபாவாகவும், 332.00 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கியில் – அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாவிலிருந்து, 323 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles