இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டியகம பிரதேசத்தில் நேற்று (30) மாலை தந்தை ஒருவர் தனது மகனால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தலையில் இரத்தக் காயங்களுடன் வீட்டின் தரையில் விழுந்து இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிரிபிட்டியகம, அலுத் வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் 34 வயது மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட தந்தையை மகன் தொடர்ச்சியாக தாக்கியதாகவும், கொலைச் சம்பவத்தின் போது சந்தேகநபரும் உயிரிழந்த நபரும் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.