NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது சொந்த இதயத்தை கண்ணாடிப் போத்தலுக்குள் பார்த்த பெண் : எப்படி சாத்தியம் ?

பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது இதயத்தை கண்ணாடி போத்தலுக்குள் பார்த்த வினோதமான ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

தொழிநுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இவ்வுலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதோடு பல்வேறு துறைசார் வளர்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன.

அதற்கு மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல.
புதிய தொழில்நுட்பங்கள் விலைமதிப்பற்ற எண்ணற்ற உயிர்களைக் காக்க தற்போது உதவி வருகிறது.


முன்பெல்லாம் யோசித்துக் கூட பார்க்க முடியாத சிகிச்சையும் ஆப்ரேஷனும் இப்போது சாதாரணமாகவே நடக்கிறது.
இதற்கு மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியே காரணம்.


இதற்கு லண்டனில் நடந்துள்ள ஒரு சம்பவத்தினை உதாரணமாக கூற முடியும்.


பெண் ஒருவர் அருங்காட்சியகத்தில் தனது சொந்த இதயத்தை வந்து பார்த்துள்ளார்.
இதயம் வெளியே இருந்தால் எப்படி அந்த பெண் உயிருடன் இருக்க முடியும் என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த பெண்ணை காக்க உயிர் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அப்போது, அந்த பெண்ணின் உடலில் இருந்து அகற்றப்பட்ட தனது சொந்த இதயத்தைப் பார்ப்பதற்காகச் சமீபத்தில் அந்த பெண் அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளார்.


ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் சுட்டன் என்பவரே, லண்டனில் உள்ள ஹன்டேரியன் அருங்காட்சியகத்திற்கு தனது இதயத்தைப் பார்வையிட சென்றுள்ளார்.

இது குறித்து அந்த பெண் கூறுகையில், ‘நான் முதலில் உள்ளே நுழைந்த போது பல ஆண்டுகளாக அது எனக்கு இருந்த ஒன்று தானே என்றே யோசித்தேன். சற்று வினோதமாகவே முதலில் இருந்தது. நான் என் வாழ்நாளில் டப்பாவுக்குள் நிறைய விடயங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எனது இதயத்தையே அப்படிப் பார்ப்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் உடல் உறுப்பு தானத்தை ஆதரிக்கிறேன். இது தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு‘ எனத் தெரிவித்துள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles