NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தவறான ஆவணங்களை வெளியிடும் நபர்களை கைது செய்ய திட்டம்!

தவறான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை இணையத்தில் வெளியிடும் நபர்களை எவ்வித முறைப்பாடுகளுமின்றி கைது செய்யும் திட்டத்தை  கூகுள் (Google) நிறுவனங்கள் அமைத்துள்ளன.

இளம் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டால் அல்லது அது போன்ற காணொளிகள் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டால், அது பற்றிய தகவல்களை இலங்கையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு வழங்கும் திட்டத்தை (Google) நிறுவனங்கள் அமைத்துள்ளன.

அதன் பின்னரே அந்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களை முறைப்பாடு இன்றி கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கூகுளில் இருந்து கிடைத்த தகவலின் படி, கொழும்பில் வசிக்கும் 18 வயது இளைஞன் முதலாவதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது 12 வயது உறவினரை இரண்டு வருடங்களாக தவறான முறையில் வன்கொடுமை செய்து இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Share:

Related Articles