ஸ்பெயினில் இருந்து உருகுவே நோக்கிப் பறந்த ஏர் யூரோபா விமானம் பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
UX045 என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகவும் இதன் காரணமாக சாவ் பாலோவில் உள்ள நடால் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.32 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்க கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த அவசர தரையிறக்கம் காரணமாக 30 பேர் விமான நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றனர் மேலும் 10 பேர் மேலதிக பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாட்ரிட்-பராஜஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் உருகுவேயின் மான்டிவீடியோவில் உள்ள கராஸ்கோ சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
எவ்வாறாயினும், விமானத்தில் பணியாளர்கள் உள்ளிட்ட 325 பேர் இருந்துள்ளனர். நிலைமையை முன்கூட்டியே உணர்ந்த விமானிகள் சீட் பெல்ட்டை அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், சில பயணிகள் சீட் பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.