NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திமிங்கல வாந்தியை விற்க முற்பட்டவர் கைது !

அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாசனை திரவியம் தயாரிக்க, மருந்து மற்றும் மசாலாவாகவும் மேற்கத்திய நாடுகளில் திமிங்கிலங்கள் கக்கும் வாந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் இதற்குள்ள மதிப்பு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles