NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருட்டுக் குற்றத்தில் கைதான மாணவன் – நிதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு…!

அம்பலாங்கொட பிரதேசத்தில் 2 வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை இன்று (18) பிறப்பித்துள்ளார்.இவ்வாறு அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், தாய்க்குக் கீழ்ப்படியாத மாணவன் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.2 வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் மாணவனை தமது பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.திருடப்பட்ட 2 கையடக்கத் தொலைபேசிகளும் மாணவனின் வசம் காணப்பட்ட போதிலும் 800 ரூபா மாத்திரமே காணப்பட்டது.குறித்த மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரிக்கு ஸ்ரீபாதா தரிசனம் செய்ய கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.2 வீடுகளில் இருந்தும் 121,000 ரூபா பணத்தையும், 1 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கையடக்கத் தொலைபேசிகளையும் மாணவன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.அந்த 2 ஸ்மார்ட்போன்களையும் தான் ஆசையாக திருடிச் சென்றதாக அந்த மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.திருடப்பட்ட பணத்தை அந்த மாணவன் உண்மையில் செலவு செய்தாரா? அல்லது வேறு இடத்தில் மறைத்து வைத்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் 2 வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் நீதிமன்றத்தினால்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பாடசாலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை இன்று (18) பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், தாய்க்குக் கீழ்ப்படியாத மாணவன் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2 வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் மாணவனை தமது பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

திருடப்பட்ட 2 கையடக்கத் தொலைபேசிகளும் மாணவனின் வசம் காணப்பட்ட போதிலும் 800 ரூபா மாத்திரமே காணப்பட்டது.

குறித்த மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரிக்கு ஸ்ரீபாதா தரிசனம் செய்ய கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2  வீடுகளில் இருந்தும் 121,000 ரூபா பணத்தையும், 1 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கையடக்கத் தொலைபேசிகளையும் மாணவன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த 2 ஸ்மார்ட்போன்களையும் தான் ஆசையாக திருடிச் சென்றதாக அந்த மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட பணத்தை அந்த மாணவன் உண்மையில் செலவு செய்தாரா? அல்லது வேறு இடத்தில் மறைத்து வைத்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles