NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு..!

147,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, ஏல விற்பனையினூடாக 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 62,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், வழங்கப்படவுள்ளது.

அத்துடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20 ,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Share:

Related Articles