NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துனிசியா பிரதமர் திடீரென பதவி நீக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நாஜ்லா பௌடன் கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாஜ்லா பௌடனை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக ஜனாதிபதி கைஸ் சையத் திடீரென்று அறிவித்தார்.

நஜ்லா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சானியை ஜனாதிபதி நியமித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி தனது அதிகார வரம்பை கூடுதலாக நீட்டித்து கொண்டதன் மூலம் அப்போதைய பிரதமரை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றத்தையும் கலைத்து உத்தரவிட்டார். அதன்பின் 2 மாதங்களுக்கு பிறகு நாஜ்லா பௌடனை பிரதமராக நியமித்தார்.

கடந்த ஆண்டு திருத்திய அரசியலமைப்பு மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும் ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே நாஜ்லா பௌடன் திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக வெளிவிவகார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களை காரணம் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்து துனிசியா ஜனாதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles