NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள வணிகக் கடல் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த அலுவலகம் தற்போது கொள்ளுப்பிட்டி அநாகரிக தர்மபால மாவத்தையில் இலக்கம் 53இல் தற்காலிகமாக பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு 10, மருதானை வீதி, 79 டெக்னில் சந்தியில் அமைந்துள்ள கொடகிளி வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளதால், ஜூலை 28 முதல் ஜூலை 31 வரை பொதுமக்களுக்கான சாதாரண சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அவசரகால சேவைகள் ஒன்லைனில் பராமரிக்கப்படுகின்றன. அதற்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தலாம்.

Share:

Related Articles