(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ் நிலப்பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று (29) இரவு முழுவதும் பெய்த அடை மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நொடிக்கு 14,000 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, ஹலவத்த, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை குறித்து மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், அவ்வழியாக செல்லும் சாரதிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.