செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்னில் சுருண்டது. கே.எல். ராகுல் மட்டும் தாக்குப்பிடித்து சதம் அடித்தார். 2ஆவது இன்னிங்சில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்தது. இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
பும்ரா மட்டும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார். தென்ஆப்பிரிக்காவின் டீல் எல்கர் 185 ரன்கள் குவித்து இந்தியாவை தோற்கடித்து விட்டார். மேலும் பந்து வீச்சாளரான ஜேன்சன் 84 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.
இந்நிலையில், இன்று 2ஆவது போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேன்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.