தென்கொரிய துறைமுக நகரான பூசானில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று இராணுவ பயிற்சி நடவடிக்கைகளுக்காக தென்கொரிய துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா , தென்கொரிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ உத்தியோகத்தர்கள் இந்த பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
24 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.இவ்வாறான பின்னணியில் தென்கொரியாவில், அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.