NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மாற்றுப்பாதைக்கு அருகில் இன்று (21) பிற்பகல் கார் ஒன்று சொகுசு பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று வீதியின் இடதுபுறத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி பின்னர் வலதுபுறம் இருந்த பாதுகாப்பு வேலியிலும் மோதியுள்ளது.

இதன்போது பின்னால் வேகமாக வந்த சொகுசு பஸ்சில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles