NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெல்லிப்பளையில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 

பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. 

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Share:

Related Articles