வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று (19) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பழை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் முத்துமாரி அம்மனுக்கு மகா லட்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.







