NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய அடையாள அட்டை புகைப்பட கட்டணம் அதிகரிப்பு – எவ்வளவு தெரியுமா?

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படங்களை செயன்முறைக்கு உட்படுத்துவதற்கான கட்டணத்தை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அதிகரித்துள்ளது.

குறித்த விபரம் தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பொன்றும் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், சர்வதேச சிவில் விமானசேவை ஒழுங்கமைப்பின் தரவு தளத்துக்கு, அடையாள அட்டைப் புகைப்படங்களை பதிவேற்றும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்கின்றவர்கள் மற்றும் இதற்கு முன்னதாக விண்ணப்பித்தவர்கள் பிரதியை பெறும் போது புகைப்படங்களை தரவேற்றுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் அறவிடப்படும் கட்டணம் உயரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக இனிவரும் காலங்களில் புகைப்படப்பிடிப்பாளர்கள் 400 ரூபாவினை கட்டணமாக அறவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் இதற்கு முன்னர் 150 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles