தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவோம் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாலியல் தொழிலுக்கு விதிமுறைகள் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தற்போது சமூகத்தில் பாரிய பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் சமன்மலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமன்மலி குணசிங்க, ”நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் அதிகளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அத்துடன், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். பாலியல் தொழிலுக்கு சில சட்ட அமைப்பு தேவை. ஆனால், இதை நாங்கள் விளம்பரப்படுத்துவதில்லை.
பெண்களுக்கு கண்ணியமாக வேலை செய்யக்கூடிய வகையில், உழைப்பு மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படாத வேலையை வழங்கினால் பாலியல் தொழிலாளி என்பதனை ஒழிக்க முடியும். அதற்கான திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.