NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் காலங்களில் போலி விளம்பரங்கள் தொடர்பில் அவதானம்..!

தேர்தல் காலங்களில் வெளிவரும் போலி விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தேர்தல் ஆணைக்குழுவினரால் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாக பல்வேறு விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இத்தகைய போலி விளம்பரங்களை அழுத்திப் பார்வையிடுவதற்கு முன்னர் சிந்தித்துச் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான போலி விளம்பரங்கள் இணையவழி மோசடிகளாகவும் இருக்கலாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

Share:

Related Articles