NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்க வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் பிரசாரங்களுக்காக வேட்பாளர்களினால் தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மத்தியஸ்த மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் சகலவற்றையும் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

கட்சி மற்றும் குழுக்களினால் 12 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் தேர்தல் தொகுதிகளில் ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை முன்னெடுத்துச் செல்லமுடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 12ஆம் திகதி முதல் தேர்தல் முடியும் வரை வேட்பாளர்களின் அலுவலகங்களாக அவர்கள் வீடுகளை பயன்படுத்த முடியும். ஆனால் அவற்றில் பிரசாரங்கள், கொண்டாட்டங்களை மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles