யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாக பதாகைகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.