தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுப் பயணிகள் பாரிய அசௌகரியங்களை நேற்று எதிர்நோக்கியிருந்தனர்.
எனினும், புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு மத்தியில் அலுவலகப் புகையிரதங்கள் உள்ளிட்ட 35 புகையிரத பயணங்கள் இடம்பெறுவதாகத் புகையிரத பிரதி பொது முகாமையாளர் என்.ஜே இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று மாலை கம்பஹா மற்றும் வெயாங்கொடை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் பெமுல்ல பகுதியில் பயணித்த புகையிரதத்தில் இருந்து சன நெரிசல் காரணமாகத் தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.