ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாலத்துக்கு எதிராக அரிமுகமான தமிழக வீரர் சாய் கிசோர் 4 ஓவர்களில் 25 ஓட்டங்கள் மாத்திரம் கொடுத்து 1 விக்கெட் எடுத்து சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டிருந்தார்.
அதேவேளை புர்டேல், திபேந்திரா சிங், சொம்பல் கமி ஆகிய 3 நேபாள் வீரர்கள் கொடுத்த பிடியெடுப்புக்களையும் சாய் கிஷோர் கச்சிதமாக பிடித்தார்
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே அதிக பிடியெடுப்புக்களை எடுத்த இந்திய வீரர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை சாய் கிசோர் படைத்துள்ளார்.
இதற்கு முன் 2006 இல் சுரேஷ் ரெய்னா, 2010 இல் பியூஸ் சாவ்லா, 2011 இல் மனோஜ் திவாரி, 2014 இல் அம்பத்தி ராயுடு, 2016 இல் ரிஷி தவான், 2016 இல் பவன் நெகி, 2023 இல் திலக் வர்மா ஆகிய 7 இந்திய வீரர்கள் தங்களுடைய அறிமுக போட்டியில் தலா 2 பிடியெடுப்புக்களை எடுத்தமையே முந்தைய சாதனையாகும்.