NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோட்ட தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி 2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுத்தால் அதற்கு ஆதரவு – ம.ராமேஸ்வரன் தெரிவிப்பு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தோம்.

அடிப்படை நாள் சம்பளமாக 1,350 ரூபா வழங்கப்பட்டது. எஞ்சிய 350 ரூபாவுக்கு கம்பனி தரப்பில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி, ஆண்கள் 8 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும், மேலதிக கொழுந்து என பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை தாம் ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியினரின்; தொழிற்சங்க உறுப்பினர்கள் 2,000 ரூபா சம்பளம் வேண்டும் என அன்று கூறினார்கள். எனவே, அந்த தொகையை பெற்றுக்கொடுத்தால் நாம் முழு ஆதரவையும் வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பிரதிநிதிகளையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் எனவும், கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் நாமே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

கல்வி புரட்சி மூலமே நாம் இலகுவில் சமூக மாற்றத்தை முன்னோக்கி செல்ல முடியும்.

அதனால் கல்வித்துறைக்கும், பாடசாலைக்கும் கூடுதல் நிதிகளை ஒதுக்கி, அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், தமது சமூகத்தின் வளர்ச்சி கல்வியில்தான் தங்கியுள்ளது. எனவே கல்வியில் நம்மவர்கள் உயர்ந்தால் நிச்சயம் சமூக மாற்றமும் வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles