NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோனிக்கு புகழாரம் சூட்டிய கே.எல் ராகுல்!

முன்னாள் இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

எம்.எஸ்.தோனி ஐசிசியின் முக்கியமான 3 உலகக் கிண்ணங்களை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அவரது சாதனைகளை இதுவரை எந்த இந்திய தலைவரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் தலைமையில் வென்றது. தற்போது, ஐபிஎல் மினி ஏலம் டிச.19இல் தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மும்பை தலைவராக ஹார்திக் நியமிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளம் முழுக்க ரோஹித் சர்மா ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தினை பதிவு செய்து வருகிறார்கள்.

சமூக ஊடங்கங்களில் செயல்பாட்டில் இல்லாத தோனி எப்போதும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் தலைவர் கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் தோனி குறித்து நேர்காணலில் கே.எல்.ராகுல் கூறியதாவது,

எங்களில் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது. யாரும் அந்த உயர்ந்த மனிதனுடன் ஒப்பிட விரும்பமாட்டோம். அவர்தான் எப்போதும் எங்களுக்கு தலைவன். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். டிஆர்எஸ், ஸ்டம்பிங்கில் அவர் செய்ததை பார்த்து நான் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles