NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் சைஃப் அலிகானை குத்திய சந்தேகநபர் கைது!

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மும்பை பொலிஸார் பல்வேறு சந்தேக நபர்களை பாந்த்ரா பொலிஸ் நிலையத்துக்கு நேற்றிரவு இரவு அழைத்து வந்துள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் கடந்த புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சத்தம் கேட்டு நடிகர் சைஃப் அலிகான் எழுந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை அவர் பிடிக்க முயன்ற போது மர்மநபர் கத்தியால் 6 முறை நடிகர் சைஃப் அலிகானை குத்தியுள்ளார். இதில் சைஃப் அலிகானுக்கு பல இடங்களில் கத்திக் குத்து விழுந்த நிலையில் அவர் படுகாயமடைந்தார்.

இதனை தொடர்ந்து சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராகிம் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர் ஆகியோர் மும்பை பாந்த்ரா பகுதியில் லீலாவதி வைத்தியசாலைக்கு  அதிகாலை 3 மணிக்கு கொண்டு சென்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் அபாய கட்டத்தை தாண்டியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Share:

Related Articles