ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.