NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – 25% பாடசாலை மாணவர்கள்…!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 25 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் ஊடகத்திற்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

நாளை பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன், இச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 42,184 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

.

Share:

Related Articles